WELCOME to TNPSC++

Wednesday, January 26, 2022

TNPSC Group-4 Exam


 TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், விஏஓ பதவிகளுக்கான காலியிடங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தினாலும், குரூப் 4 தேர்வு தான் தேர்வர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். அதுவும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வு கொள்குறி வகை அடிப்படையிலானது. விரிவான எழுதுதல் தேர்வு கிடையாது. இந்த எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் நீங்களும் அரசு அதிகாரி தான். மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதற்கிடையே குரூப் 4 தேர்வானது விஏஓ பதவிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுவதால், ஒவ்வொரு முறையும் அதிகமான தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர். குரூப் 4 தேர்வுகளில் விஏஓ பதவிகளுக்கு தனி மவுசுதான். அந்த பதவிக்கு உண்டான பொறுப்புகள் மற்றும் மரியாதை காரணமாக சில தேர்வர்கள் விஏஓ பதவிகளையே விரும்புகின்றனர்.

தற்போது TNPSC குரூப் 4 தேர்வானது, 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman).

இதற்கு முன் விஏஓ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு, அதற்கென தனி பாடத்திட்டம் இருந்த வந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்து, ஒரே பாடத்திட்டமாக, தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வு, தேர்வர்களிடையே கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் ஒன்றான விஏஓ பதவிகளில் தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் தேர்வு அறிவிப்பில் விஏஓ பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் குரூப் 4 தேர்வுக்கான மற்ற பதவிகளிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வு அறிவிப்புகளில் அதிக காலியிடங்களை கொண்டுள்ள தேர்வு குரூப் 4 தேர்வு தான். இதில் தற்போது விஏஓ காலியிடங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற துறைகளிலும் அதிக காலியிடங்கள் உள்ளதாக கூறப்படுவதால், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பதவிகள் நிரப்பப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வுக்கு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.

தற்போது TNPSC, குரூப் 4 தேர்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான பாடத்திட்டத்தின் பாடக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், கீழ்கண்ட இணையதளப் பக்கத்தில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்து பயன் பெறுங்கள்

இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/.../new_syllabus_CCSE_IV_Gruop...

நன்றி:- தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்..

No comments:

Post a Comment