WELCOME to TNPSC++

Wednesday, January 26, 2022

Group-4 Exam Details


 குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்வு தயாராவது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வு தான் இந்த குரூப் 4 தேர்வு. தற்போது இந்த தேர்வுகள் மூலமே விஏஓ பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த குரூப் 4 தேர்வு, அரசு வேலைக்காக ஏங்குபவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான முதன்மை காரணம், இந்த தேர்விற்கான குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது தான். அடுத்ததாக, ஒரேயொரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை கனவு நனவாகிடும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் இப்போது வரக்கூடிய குரூப் 4 தேர்வுகளில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு தேர்வு நடைபெறாததால், இடைப்பட்ட காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களும், இந்த ஆண்டு தேர்வில் கலந்துக் கொள்வர். எனவே தேர்வு போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே குறைந்த கால இடைவெளியில், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

பதவிகள்:-

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,

:- இளநிலை உதவியாளர் (Junior Assistant),
:- தட்டச்சர் (Typist),
:- சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist),
:- கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer),
:- வரித் தண்டலர் (Bill Collector),
:- நில அளவர் (Field Surveyor),
:- வரைவாளர் (Draftsman)

அடுத்ததாக குரூப் 4 தேர்வுக்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

கல்வித் தகுதி:-

இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் குரூப் 4 தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.

இப்போது குரூப் 4 தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் குறித்து பார்ப்போம்.

தேர்வு முறை:-

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.

அ. மொழிப்பாடம்

முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.

நன்றி:- இந்தியன் எக்ஸ்பிரஸ் 

No comments:

Post a Comment