Wednesday, January 26, 2022
TNPSC Group 4 preparation tips:
TNPSC Group 4 - Preparation tips: முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம்
தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்கவேண்டும்.
அருணுக்கு 29 வயது. பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்துவிட்டு வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அரசுப் பணி மீது அருணுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை முயற்சித்துப் பார்ப்பதில் ஏனோ தயக்கம் அவருக்கு.
அரசுப்பணி என்றாலே எல்லோரும் தயங்குவதற்குக் காரணம் அசாத்தியப் பொறுமையும், அபார உழைப்பும், காத்திருப்பும் தேவைப்படும் என்பதுதான். ஆனால் முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றுப் பணியில் சேர்வதும் சாத்தியம்தான். நம் முன்னாலேயே இதற்கான முன்னுதாரணர்கள் ஏராளமாய் இருக்கின்றனர்.
ஒருவர் முதல்முறையாகப் படித்துத் தேர்வெழுதும்போது, பெரும்பாலும் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதைக் கடினமாக உணர்ந்திருக்கலாம். இரண்டாவது முறை எழுதும்போது மதிப்பெண்கள் கிடைத்தாலும், நூலிழையில் பலர் வேலையைத் தவறவிட்டிருக்கலாம். 3வது முறை முயற்சித்தால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள். எனினும் ஒருவர் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம்.
ஒரு தேர்வுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால், அவை அனைத்தும் நமக்கானவை என யாரும் நினைக்கக்கூடாது. அதில் பொது, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, தமிழ்வழி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பல்வேறு ஒதுக்கீடுகள் இருக்கும் என்பதால் நமக்கான போட்டியிடங்கள் சில நூறு மட்டுமே என நினைத்துப் படிக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும். இதை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும்.
''பொதுவாக குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. எனினும் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கலாம். அரசியலமைப்பு (இந்திய ஆட்சியியல் ) பாடத்துக்கு மட்டும் தனி கையேடு அல்லது பட்டப்படிப்பு தரத்திலான புத்தகங்களைப் படிக்க வேண்டியது தேர்வை எதிர்கொள்ள உதவும்'' என்கிறார் போட்டித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் நாகராஜன்.
குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய இரண்டு பகுதிகளிலும் தலா 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகளுக்குத் தேர்வு எழுத வேண்டும். 1 கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வகையில், மொத்தம் 300 மதிப்பெண்கள் கிடைக்கும். இதில் குறைந்தபட்சத் தேர்ச்சியாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படிப் படிக்க வேண்டும்?
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் தினந்தோறும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதைவிடவும் கூடுதல் நேரம் செலவிட்டால்... அதாவது முதலீடு செய்தால், அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.
முதலில் 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பாடங்களை வரிகள் விடாமல், புரிந்து படிக்க வேண்டும். அடிப்படையை சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதன் நீட்சியாக அடுத்தடுத்த வகுப்புகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாடங்களைத் தெளிவாகப் படிக்க முடியும். அதேபோல புத்தகத்துக்குப் பின்னால் உள்ள பாடங்களையும், பயிற்சிகளையும் படிக்க வேண்டும்.
தூக்கம் வரும்போது...
தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கலாம். திறனறிவு (APTITUDE) கொண்ட கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். அப்போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இவற்றின் மூலம் உறக்கத்தையும் சோர்வையும் தவிர்க்கலாம்.
ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடத்தை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம் (சோர்வு ஏற்படும் நேரத்தில் மாற்றிப் படிப்பது தாண்டி). அல்லது அடிப்படையில் (6-ம் வகுப்பில்) இருந்து ஒரு பாடத்தைப் படித்தால், அதே தரத்தில் உள்ள பிற பாடங்களைப் படிக்கலாம். இதனால் தேவையற்ற குழப்பம், மறதி ஏற்படாது.
எதைப் படிக்க வேண்டும்?
அதேபோல முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமாகவும் புலமையுடனும் இருப்பர். அதேபோலப் பிடிக்காத பாடமும் இருக்கும். எந்தப் பாடத்தில் நாம் வலிமை குறைந்தவர்களாக இருக்கிறோமோ அந்தப் பாடத்தை முதலில் படித்து முடிக்க வேண்டும்.
பொது அறிவு (General Studies)பகுதி பரந்துபட்ட ஒன்று. இதில், பொது அறிவியல் (GENERAL SCIENCE), நடப்பு நிகழ்வுகள் (CURRENT EVENTS), புவியியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY), இந்திய ஆட்சியியல் (INDIAN POLITY), பொருளாதாரம் (INDIAN ECONOMY), இந்திய தேசிய இயக்கம் (INDIAN NATIONAL MOVEMENT), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMILNADU ), தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU) ஆகிய 9 பகுதிகள் உள்ளன.
இந்த 9 பகுதிகளில் இருந்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (APTITUDE & MENTAL ABILITY TESTS) பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இருக்கும். இவை அனைத்தையும் படித்தால்தான் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.
ஆனால் பொதுத் தமிழ் (General Tamil) அப்படியல்ல. தமிழை மட்டும் முழுமையாகப் படித்தாலே 100 கேள்விகளில் 95 கேள்விகளுக்காகவது சரியாக பதிலளிக்க முடியும்.
FIR & Govt Jobs
FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா? தவறு செய்யாதபோது FIR-ஐ நீக்குவது எப்படி?
அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களைத் தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசுப் பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்றப் பின்னணி மற்றும் ஒழுக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளவே 'FIR பதியப்பட்டுள்ளதா?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருவர்மீது FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைக்காதா என்ற கேள்விக்கான பதிலை பார்ப்போம்..
"FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைப்பதற்கு சிக்கல் ஏற்படுமா என்பது எந்தக் குற்றத்திற்காக FIR பதியப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும். ஓவர் ஸ்பீட், லைசன்ஸ் இல்லாதது, பெட்டி கேஸ், இதைப் போன்ற வழக்குகளில் பதியப்படும் FIR மற்றும் சிவில் வழக்குகளில் பதியப்படும் FIR -ஆல் அரசு வேலை கிடைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. குற்றவியல் (Criminal -கிரிமினல்) குற்றங்கள் புரிந்தவர் என்ற அடிப்படையில் ஒருவர் மீது பதியப்படும் FIR அரசு வேலை கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுத்தலாம்.
*செய்யாத குற்றத்திற்காக ஒருவர் மீது FIR பதியப்பட்டால்?*
புகார்தாரர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் பதியப்படுவது தான் முதல் தகவல் அறிக்கை (First Information Report -FIR). அந்தப் புகாரை காவல்துறை விசாரித்து, விசாரணை முடிவுகளைக் குற்றப் பத்திரிக்கையாக (Charge Sheet) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஒருவர்மீது FIR பதியப்பட்டால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். FIR-ல் அளித்திருக்கும் புகாரை காவல்துறை விசாரித்த பிறகு அவர் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என விசாரணை முடிவுகள் வந்தால் குற்றப் பத்திரிக்கையில் அது குறித்து விளக்கம் அளித்து FIR-ல் இருந்து அவர் பெயர் நீக்கப்படும். இதே போல் FIR-ல் குறிப்பிடாத நபர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தால் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு அவர்கள் பெயர்கள் FIR-ல் சேர்க்கப்படும். குற்றங்களை அவர் தான் செய்தார் என நீதிமன்றத்தில் நிரூபணமானால் தான் அவர் குற்றவாளி.
செய்யாத குற்றத்திற்காகவோ, சந்தேக அடிப்படையிலோ ஒருவர் மீது FIR பதியப்படுகிறது. விசாரணையில் அவர் எந்தவகையிலும் குற்றத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிந்து குற்றப் பத்திரிக்கையில் அவர் பெயர் இடம் பெறவில்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. அல்லது நீதிமன்ற விசாரணையில் நிரபராதி என நிரூபணமானாலும் எந்தச் சிக்கலும் இல்லை. FIR பதிவதற்கு முன்பே எதிர்த்தரப்பு புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற பிறகு எதிர்த்தரப்புடன் சமரசம் அல்லது தீர்வு கண்டு விடுவிக்கப்பட்டால் அரசு வேலை கிடைப்பதில் பிரச்னை உண்டு. கிரிமினல் வழக்குகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துதல், தொடர் குற்றங்கள், கொடுங்குற்றங்கள் புரிவது போன்ற குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு வேலை கிடைக்காது. ஒருவர்மீது வழக்குகள் நிலுவையிலிருந்தாலும் வேலை கிடைக்காது. நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபட்ட பிறகே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. காவல்துறை போன்ற சீருடை பணியாளர்களை நியமிக்கும் பொழுது அவர்கள் குற்றப் பின்னணி கூடுதல் கவனத்தோடும், தீவிரமாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பணியில் இருப்பதால் அவர் நேர்மையானவராகவும், எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவராகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்.
சிறைத் தண்டனையில் இருக்கும் நபருக்கு வேலை கிடைக்காது. சிறை தண்டனை அனுபவித்தவராக இருந்தாலும், ஒருவரை இருமுறை தண்டிக்கச் சட்டத்தில் இடமில்லை எனக் கருதி தண்டனைக் காலம் முடிந்த பிறகு வேலை கிடைக்கலாம்.
கிரிமினல் வழக்குகள் மட்டுமல்ல, எந்த வழக்கு சம்பந்தப்பட்ட FIR ஒருவர் மீது பதியப்பட்டிருந்தாலும், அதை அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது குறிப்பிட வேண்டும். 'இது தான் கொடுங்குற்றம் இல்லையே' என நினைத்து தன் மீதுள்ள FIR -ஐ ஒருவர் குறிப்பிடாமல் விட்டாலோ, மறைத்தாலோ, போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். பொய் புகார் என விசாரணையில் தெரிய வரும் நிலையில் காவல்துறையே FIR-ஐ ரத்து செய்துவிடும். அப்படி ரத்து செய்யாத நிலையில் பிரதிவாதி உயர் நீதிமன்றத்தை அணுகி FIR-ஐ ரத்து செய்ய மனு அளிக்கலாம். நீதிமன்றம் விசாரித்துப் பிரதிவாதி மீது பொய்யாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது எனக் கருதினால் FIR-ஐ ரத்து செய்யலாம். இல்லையேல் வழக்கை இன்னும் விசாரிக்கவேண்டும் எனக் கருதி கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம்."
நன்றி: விகடன்
தகவல்:-
திருவாரூர் தெற்கு மாவட்டம் மாணவரணி
தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு;
தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 7296 பணியிடங்கள்; 12, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2021
தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 15.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Midlevel Healthcare Provider)
காலியிடங்களின் எண்ணிக்கை : 4848
கல்வித் தகுதி : செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2448
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதள பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட நலவாழ்வுச் சங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் : https://nhm.tn.gov.in/.../documents/Application_MLHP.pdf
சுகாதார ஆய்வாளர் : https://nhm.tn.gov.in/.../files/documents/Application_HI.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் : https://nhm.tn.gov.in/.../files/documents/MLHP_Vacancy.pdf
சுகாதார ஆய்வாளர் : https://nhm.tn.gov.in/.../files/documents/HI_Vacancy.pdf

Appearing for Govt Exams
தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்கவேண்டும்.
அருணுக்கு 29 வயது. பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்துவிட்டு வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அரசுப் பணி மீது அருணுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை முயற்சித்துப் பார்ப்பதில் ஏனோ தயக்கம் அவருக்கு.
அரசுப்பணி என்றாலே எல்லோரும் தயங்குவதற்குக் காரணம் அசாத்தியப் பொறுமையும், அபார உழைப்பும், காத்திருப்பும் தேவைப்படும் என்பதுதான். ஆனால் முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றுப் பணியில் சேர்வதும் சாத்தியம்தான். நம் முன்னாலேயே இதற்கான முன்னுதாரணர்கள் ஏராளமாய் இருக்கின்றனர்.
ஒருவர் முதல்முறையாகப் படித்துத் தேர்வெழுதும்போது, பெரும்பாலும் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதைக் கடினமாக உணர்ந்திருக்கலாம். இரண்டாவது முறை எழுதும்போது மதிப்பெண்கள் கிடைத்தாலும், நூலிழையில் பலர் வேலையைத் தவறவிட்டிருக்கலாம். 3வது முறை முயற்சித்தால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள். எனினும் ஒருவர் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம்.
ஒரு தேர்வுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால், அவை அனைத்தும் நமக்கானவை என யாரும் நினைக்கக்கூடாது. அதில் பொது, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, தமிழ்வழி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பல்வேறு ஒதுக்கீடுகள் இருக்கும் என்பதால் நமக்கான போட்டியிடங்கள் சில நூறு மட்டுமே என நினைத்துப் படிக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும். இதை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும்.
''பொதுவாக குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. எனினும் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கலாம். அரசியலமைப்பு (இந்திய ஆட்சியியல் ) பாடத்துக்கு மட்டும் தனி கையேடு அல்லது பட்டப்படிப்பு தரத்திலான புத்தகங்களைப் படிக்க வேண்டியது தேர்வை எதிர்கொள்ள உதவும்'' என்கிறார் போட்டித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் நாகராஜன்.
குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய இரண்டு பகுதிகளிலும் தலா 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகளுக்குத் தேர்வு எழுத வேண்டும். 1 கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வகையில், மொத்தம் 300 மதிப்பெண்கள் கிடைக்கும். இதில் குறைந்தபட்சத் தேர்ச்சியாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படிப் படிக்க வேண்டும்?
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் தினந்தோறும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதைவிடவும் கூடுதல் நேரம் செலவிட்டால்... அதாவது முதலீடு செய்தால், அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.
முதலில் 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பாடங்களை வரிகள் விடாமல், புரிந்து படிக்க வேண்டும். அடிப்படையை சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதன் நீட்சியாக அடுத்தடுத்த வகுப்புகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாடங்களைத் தெளிவாகப் படிக்க முடியும். அதேபோல புத்தகத்துக்குப் பின்னால் உள்ள பாடங்களையும், பயிற்சிகளையும் படிக்க வேண்டும்.
தூக்கம் வரும்போது...
தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கலாம். திறனறிவு (APTITUDE) கொண்ட கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். அப்போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இவற்றின் மூலம் உறக்கத்தையும் சோர்வையும் தவிர்க்கலாம்.
ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடத்தை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம் (சோர்வு ஏற்படும் நேரத்தில் மாற்றிப் படிப்பது தாண்டி). அல்லது அடிப்படையில் (6-ம் வகுப்பில்) இருந்து ஒரு பாடத்தைப் படித்தால், அதே தரத்தில் உள்ள பிற பாடங்களைப் படிக்கலாம். இதனால் தேவையற்ற குழப்பம், மறதி ஏற்படாது.
எதைப் படிக்க வேண்டும்?
அதேபோல முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமாகவும் புலமையுடனும் இருப்பர். அதேபோலப் பிடிக்காத பாடமும் இருக்கும். எந்தப் பாடத்தில் நாம் வலிமை குறைந்தவர்களாக இருக்கிறோமோ அந்தப் பாடத்தை முதலில் படித்து முடிக்க வேண்டும்.
பொது அறிவு (General Studies)பகுதி பரந்துபட்ட ஒன்று. இதில், பொது அறிவியல் (GENERAL SCIENCE), நடப்பு நிகழ்வுகள் (CURRENT EVENTS), புவியியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY), இந்திய ஆட்சியியல் (INDIAN POLITY), பொருளாதாரம் (INDIAN ECONOMY), இந்திய தேசிய இயக்கம் (INDIAN NATIONAL MOVEMENT), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMILNADU ), தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU) ஆகிய 9 பகுதிகள் உள்ளன.
இந்த 9 பகுதிகளில் இருந்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (APTITUDE & MENTAL ABILITY TESTS) பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இருக்கும். இவை அனைத்தையும் படித்தால்தான் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.
ஆனால் பொதுத் தமிழ் (General Tamil) அப்படியல்ல. தமிழை மட்டும் முழுமையாகப் படித்தாலே 100 கேள்விகளில் 95 கேள்விகளுக்காகவது சரியாக பதிலளிக்க முடியும்.
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்

SSC - STAFF SELECTION COMMISSION
மத்திய அரசு வேலை; 7500க்கும் அதிகமான பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 7500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்
குரூப் ‘பி’ பதவிகள்
Assistant Audit Officer
Assistant Accounts Officer
Assistant Section Officer
Assistant
Inspector of Income Tax
Inspector, (CGST & Central Excise)
Inspector (Preventive Officer)
Inspector (Examiner)
Assistant Enforcement Officer
Sub Inspector
Inspector Posts
Assistant/ Superintendent
Research Assistant
Divisional Accountant
Sub Inspector
Junior Statistical Officer (JSO)
Statistical Investigator Grade-II
குரூப் ‘சி’ பதவிகள்
Auditor
Accountant/ Junior Accountant
Senior Secretariat Assistant/ Upper Division Clerks
Tax Assistant
கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு பொதுவான கல்வித் தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி. இருப்பினும் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/.../UploadedF.../notice_CGLE_23122021.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்
TNPSC Group-4 Exam
TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், விஏஓ பதவிகளுக்கான காலியிடங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
TNPSC பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தினாலும், குரூப் 4 தேர்வு தான் தேர்வர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். அதுவும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வு கொள்குறி வகை அடிப்படையிலானது. விரிவான எழுதுதல் தேர்வு கிடையாது. இந்த எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் நீங்களும் அரசு அதிகாரி தான். மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
இதற்கிடையே குரூப் 4 தேர்வானது விஏஓ பதவிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுவதால், ஒவ்வொரு முறையும் அதிகமான தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர். குரூப் 4 தேர்வுகளில் விஏஓ பதவிகளுக்கு தனி மவுசுதான். அந்த பதவிக்கு உண்டான பொறுப்புகள் மற்றும் மரியாதை காரணமாக சில தேர்வர்கள் விஏஓ பதவிகளையே விரும்புகின்றனர்.
தற்போது TNPSC குரூப் 4 தேர்வானது, 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman).
இதற்கு முன் விஏஓ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு, அதற்கென தனி பாடத்திட்டம் இருந்த வந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்து, ஒரே பாடத்திட்டமாக, தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வு, தேர்வர்களிடையே கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் ஒன்றான விஏஓ பதவிகளில் தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் தேர்வு அறிவிப்பில் விஏஓ பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் குரூப் 4 தேர்வுக்கான மற்ற பதவிகளிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வு அறிவிப்புகளில் அதிக காலியிடங்களை கொண்டுள்ள தேர்வு குரூப் 4 தேர்வு தான். இதில் தற்போது விஏஓ காலியிடங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற துறைகளிலும் அதிக காலியிடங்கள் உள்ளதாக கூறப்படுவதால், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பதவிகள் நிரப்பப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வுக்கு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.
தற்போது TNPSC, குரூப் 4 தேர்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான பாடத்திட்டத்தின் பாடக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், கீழ்கண்ட இணையதளப் பக்கத்தில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்து பயன் பெறுங்கள்
இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/.../new_syllabus_CCSE_IV_Gruop...
நன்றி:- தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்..
Group-4 Exam Details
குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்வு தயாராவது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வு தான் இந்த குரூப் 4 தேர்வு. தற்போது இந்த தேர்வுகள் மூலமே விஏஓ பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த குரூப் 4 தேர்வு, அரசு வேலைக்காக ஏங்குபவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான முதன்மை காரணம், இந்த தேர்விற்கான குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது தான். அடுத்ததாக, ஒரேயொரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை கனவு நனவாகிடும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் இப்போது வரக்கூடிய குரூப் 4 தேர்வுகளில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு தேர்வு நடைபெறாததால், இடைப்பட்ட காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களும், இந்த ஆண்டு தேர்வில் கலந்துக் கொள்வர். எனவே தேர்வு போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே குறைந்த கால இடைவெளியில், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பதவிகள்:-
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,
:- இளநிலை உதவியாளர் (Junior Assistant),
:- தட்டச்சர் (Typist),
:- சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist),
:- கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer),
:- வரித் தண்டலர் (Bill Collector),
:- நில அளவர் (Field Surveyor),
:- வரைவாளர் (Draftsman)
அடுத்ததாக குரூப் 4 தேர்வுக்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
கல்வித் தகுதி:-
இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் குரூப் 4 தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.
இப்போது குரூப் 4 தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் குறித்து பார்ப்போம்.
தேர்வு முறை:-
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.
அ. மொழிப்பாடம்
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளில், இந்த பகுதி விருப்ப மொழிப் பாட பகுதியாக இருந்தது. அதாவது தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதாவது உங்களுக்கு வேலை கிடைக்காது. இருப்பினும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இதனால், தமிழ் மொழிப் பாடப் பகுதியில் 40 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் தமிழ் மொழிப் பாடப் பகுதி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக உள்ளது. எனவே தமிழ் மொழிப் பாட பகுதி மதிப்பெண்களும் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்.
நன்றி:- இந்தியன் எக்ஸ்பிரஸ்
Subscribe to:
Comments (Atom)